Thursday, 28 January 2016
Friday, 22 January 2016
Thursday, 21 January 2016
Wednesday, 20 January 2016
Tuesday, 19 January 2016
மக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்
மக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்:
பிப்ரவரி 5 வரை நடைபெறும்
தமிழகம் முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான தகவல் சேகரிப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து, மக்கள் கணக்கெடுப்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் சேகரிப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர் (கணக்கெடுப்பாளர்) ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, குடும்பத்தினர் பற்றிய தகவலை சேகரிப்பார்.
விவரங்களை உறுதி செய்து கொள்ள...: கணக்கெடுப்பாளர் அச்சிடப்பட்ட மக்கள்தொகை பதிவேடு புத்தகத்தையும் தன்னுடன் எடுத்து வருவார். புத்தகத்தில், குடும்ப நபர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தையின் பெயர், தாய் பெயர், பிறந்த இடம், தற்போதைய முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்கெனவே ஆதார் எண் வழங்கப்பட்டிருந்தால், அதுபற்றிய தகவலும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்.
பொதுமக்கள் தங்களின் விவரங்களை சரிபார்ப்பதோடு, முழுமையான தகவல்களையும் அளிக்க வேண்டும். மேலும், செல்லிடப்பேசி எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களையும் கட்டாயம் அளிக்க வேண்டும்.
மக்கள் தொகை பதிவேடு புத்தகத்தில் அச்சிடப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா, இறந்த நபர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதா, புதிய உறுப்பினர் (பிறந்த குழந்தை) விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா போன்ற விவரங்களையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒத்துழைக்க வேண்டுகோள்: புதிதாக குடியேறியவர்களும் விவரங்களையும் கணக்கெடுப்பாளரிடம் தவறாமல் தெரிவித்து, தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் குடும்ப நபர்களின் அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருந்து, சரிபார்த்து பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sunday, 17 January 2016
CPS ல் இனி ஒறே கணக்கு இரு கணக்குகளுக்கு விடிவு:
CPS ல் இனி ஒறே கணக்கு
இரு
கணக்குகளுக்கு விடிவு:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மத்திய அரசில், 2004 முதலும்; தமிழக அரசில், 2003 முதலும், சி.பி.எஸ்., என்ற, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட, ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்களில், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு, பொது கணக்கு அலுவலகத்திலும்; தொடக்க பள்ளி மற்றும் உள்ளாட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு தகவல் தொகுப்பு மையத்திலும் சி.பி.எஸ்., கணக்கு பராமரிக்கப்பட்டது.
அதேநேரம், பதவி உயர்வால், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பழைய சி.பி.எஸ்., கணக்கு கைவிடப்பட்டு, பொது கணக்கு அலுவலகத்தில் புதிய கணக்கு துவங்கப்பட்டது. அதனால், பல ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட, பல கோடி ரூபாயின் நிலை என்னவாகும் என, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், சி.பி.எஸ்., மற்றும் நிரந்தர பென்ஷன் திட்டமான பி.எப்., ஆகிய, இரண்டு கணக்கு நிர்வாகத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. எனவே, சி.பி.எஸ்., கணக்குகள், அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கும், பி.எப்., கணக்குகள், பொது கணக்கு அலுவலக நிர்வாகத்துக்கும் சமீபத்தில் பிரிக்கப்பட்டன. அதனால், ஒரு குழப்பம் தீர்ந்தது.
ஆனாலும், ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சி.பி.எஸ்., கணக்குகளால் ஏற்பட்ட குழப்பம் மட்டும் தீரவில்லை. இது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. எனவே, இந்த பிரச்னைக்கு தற்காலிக முடிவு கட்டப்பட்டுள்ளது. 'இரு கணக்கு வேண்டாம்' தகவல் தொகுப்பு மைய கமிஷனரகம் பிறப்பித்துள்ள உத்தரவில்,
'ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பிந்தைய புதிய சி.பி.எஸ்., கணக்குடன், பழைய கணக்கு நிதியை இணைத்து கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இனி நீடிக்க கூடாது. இதற்கு, கல்வி அதிகாரிகள், மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ்., கணக்குகள் ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பல கோடி ரூபாய் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம், சி.பி.எஸ்., திட்டத்தில் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டு, உயிரிழந்த, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான நிதி பங்களிப்பையும், தாமதமின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, 15 January 2016
ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம். .....
ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்
ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http://218.248.44.30/ecsstatus/) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம். இது குறித்து கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:
அனைத்து ஓய்வூதியர்களது ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் : ஆசிரியருக்கு பிரிண்ட் அவுட்&விண்ணப்பம் வழங்கல் மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பிற்கான "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டது. ஜன.,18 முதல் இப்பணியை ஆசிரியர்கள் துவக்குகின்றனர். 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று குடும்ப தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்து, எலக்ட்ரானிக் பொருட்கள் இருப்பு விபரம் போன்று 42 வித விபரத்தை சேகரித்து, அதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்திற்கு அனுப்பினர். மீண்டும் துவக்கம்; இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளனர். 2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும். கணக்கெடுப்பு எப்படி?2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு "பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்துடன் வீடுகளுக்கு சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர்கள், குழந்தைகள் மற்றும் இதர விபரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற்று, விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரத்தை சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஜன.,18ல் துவக்கம்:சிவகங்கை மாவட்டத்தில், தாலுகாவிற்கு குறைந்தது 100 ஆசிரியர்கள் வீதம், மக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எட்டு தாலுகாக்களில் கிட்டத்தட்ட 900 ஆசிரியர்கள் வரை ஈடுபடுவர். இப்பணியை பிப்.,5ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வீடுகளுக்கு வரும் ஆசிரியர்களிடம் உண்மையான தகவலை வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
👻 பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை
அரசு ஊழியர்கள் அதிர்ச்சி 👻:
பல நாடுகளில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட, அரசு ஊழியர் ஓய்வூதிய நிதியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது.
இதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் 2003 ஏப்., 1க்குபின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள், புதிய ஓய்வூதியதிட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதற்காக சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை ஓய்வூதிய நிதிஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன. இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை ஆணையத்தில் செலுத்தப்பட்டு உள்ளது.தற்போது இந்தியா வின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம், புதியஓய்வூதிய திட்டத்தில் வசூலித்த நிதியில்ரூ.15 ஆயிரம் கோடியை, பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. ஏற்கனவே பல நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன் பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை முதலீடு செய்யப்பட்டு உள்ளது.பங்குச்சந்தை வீழ்ச்சியால் இத்தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எஸ்தோனியா நாட்டில் ஓய்வூதிய நிதி 1.7 சதவீதம் மைனசில் சென்று உள்ளது. செக் குடியரசு, ஜப்பானில் தலா 0.3 சதவீதம், அமெரிக்காவில் 0.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேபோல் 20 நாடுகளில் 1முதல் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்து உள்ளது.
புதிய ஓய்வூதிய திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏங்கல்ஸ் கூறியதாவது: இந்தியாவில் முதற்கட்டமாக 15 சதவீத ஓய்வூதிய நிதி,பங்குசந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. தொடர்ந்து அந்த சதவீதம் அதிகரிக்கப்படும். பல நாடுகளில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஓய்வூதிய நிதி சரிவையே கண்டு உள்ளது. நம் நாட்டில்ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் முதலுக்கே மோசம் ஏற்படும், என்றார்.
Thursday, 14 January 2016
Wednesday, 13 January 2016
Monday, 11 January 2016
Sunday, 10 January 2016
CPS செய்தி; பணியாளர்கள் குறித்த விவரம் இல்லை ஓய்வு பெற்ற, இறந்த ஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் எரியோடையை சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர், பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தில் மனு அளித்தார். அதில் 2003 ஏப்., 1க்கு பின் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்தோரின் விவரம், அவர்களிடம் பிடித்த ஓய்வூதிய தொகை உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு இயக்குனரக பொதுதகவல் அலுவலரான துணை இயக்குனர் (மின் ஆளுமை) பதில் அளித்துள்ளார். அதில் மனுதாரர் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை. இதனால் பதில் அளிக்க முடியாது என, தெரிவித்துள்ளார். பள்ளி கல்வி இயக்குனர் தான், ஆசிரியர்களுக்கு துறை அலுவலராக உள்ளார். அந்த துறை அலுவலகத்திலேயே பணிபுரிவோரின் விவரம் இல்லை என, கூறியிருப்பது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்திற்கு தகவல் தருவதற்காக, 2003 ஏப்.,1க்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, 2015 மார்ச் 12ல் பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால் அதே அலுவலகத்தில் தகவல் இல்லை என, கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தகவல் கேட்டு, மேல்முறையீடு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். சர்வதேச ஓய்வூதிய சந்தையில் இந்தியா
Friday, 8 January 2016
டி.ஆர்.பி.,அறிவிப்பு: ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்'5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்
Re-uploading of
TRB
TNTET Certificates
In continuation of Teachers Recruitment Board Website Notice on 07.12.2015, the Tamil Nadu Teacher Eligibility Test Certificates are now re-uploaded in TRB website for the sake of candidates those who have lost their TNTET certificates in the recent heavy rainfall and flood.
Now, the TRB website is optimized for Internet Explorer and Mozilla Firebox browsers only. The Certificates will be open for printing only upto 05.02.2016 and the date will not be extended further.
More details
http://trb.tn.nic.in/

Wednesday, 6 January 2016
Tuesday, 5 January 2016
Sunday, 3 January 2016
📚📚📚3ம் பருவ பாடப்புத்தகம் வழங்கினாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தடை-DINAKARAN செய்தி... ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியர்களுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. ஆனால், அதை வைத்து உடனடியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக்கல்வி முறை அமலில் உள்ளது. கனமழை காரணமாக இரண்டாம் பருவத்தேர்வு, ஜனவரி 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது. இரண்டாம் பருவத்தேர்வுகளே இன்னும் நடக்காத நிலையில், மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில் பாடம் நடத்தினால் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும் என்பதால், புதிய புத்தகத்தில் பாடம் நடத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘இரண்டாம் பருவத்தேர்வு முடிந்த பின்தான் மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்படும். தற்போது ஒரு மாதம் வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரியில் புத்தகம் கொடுத்தால் அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகிவிடும் என புத்தகங்களை இப்போதே வழங்கியுள்ளனர். இரண்டாம் பருவத்தேர்வு நடத்தப்படும் முன் மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில் பாடம் நடத்த தொடங்கினால் மாணவர்கள் குழப்பம் அடைவர் என்பதால், தேர்வு முடியும் வரை புதிய புத்தகத்தில் பாடம் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.இதனால், புத்தகங்களை மாணவர்களிடம் வழங்கிவிட்டு பத்திரமாய் வீட்டில் வைக்க அறிவுறுத்தியுள்ளோம். சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் புத்தகங்களை பெயரளவில் கொடுத்துவிட்டு, மீண்டும் பெற்று பள்ளி அலமாரியில் வைத்துள்ளனர். ஏனெனில், ஆர்வ மிகுதியில் புதிய பாடத்தில் மாணவர்கள் கவனம் சென்றுவிட்டால் இரண்டாம் பருவத்தேர்வில் பின்னடைவு ஏற்படும்’ என்றனர்.
Saturday, 2 January 2016
முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு:
முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும்
ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு:
முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன.
இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும்.அதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்சி.,) முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., முடித்தால் 2 வது ஊக்க உயர்வும் வழங்கப்படும். உயர்க்கல்வி பயிலஆசிரியர்கள் கல்வித்துறையில் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தனர்.முன்அனுமதி இல்லாத தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மறுத்தனர். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்அனுமதி பெறாமல் உயர்க்கல்வி முடித்த ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித்துறை கோரியுள்ளது.இந்த பட்டியலை பெயர் விடுதலின்றி ஜன., 12 க்குள் அனுப்பி வைக்கமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)