Monday, 23 May 2016

NMMS RESULT will be PUBLISHED



தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு(NMMS) 2015 - தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்ந்து-அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்...









Saturday, 21 May 2016

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது


🎯பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

✅இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் பதிவு செய்வதற்கு கடைசி நாள் மே 24-ம் தேதி என்றும், பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க கடைசி நாள் மே 27-ம் தேதி என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும், அதேபோல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

✅பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 31-ம் தேதி வரையும், அதேபோல், விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜுன் 4-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
.

Friday, 20 May 2016

பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவு....✅விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க மே 27 வரையும் மேற்கொள்ளலாம்


📚பி.இ. கலந்தாய்வுக்கு மே 24-க்குள் பதிவு📝

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு

🎯ஆன்-லைனில் பதிவு செய்ய மே 24 கடைசி நாளாகும்.

2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் முழுவதையும் ஆன்-லைன் முறையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு அறிமுகம் செய்தது.

🌺ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான பதிவு தொடங்கியது.

ஆன்-லைன் பதிவு செய்ய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான ஏழு நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை
📅 (மே 17) வரை 1,80,646 பேர் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில்,

🖨விண்ணப்பத்தை பதிவு செய்ய மே 24 வரையும்,

✅விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க மே 27 வரையும் மேற்கொள்ளலாம்

 என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ...

CBSE Class 12 Result 2016 to be declared today 


📚CBSE Class 12 Result 2016 to be declared today

🎯The Central Board of Secondary Education Twelfth grade‬‬ (CBSE Class 12 Result 2016) will be announced on May 21 at 12 noon.....

🎀Check www.cbse.nic.in, www.cbseresults.nic.in

தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஒரு வருடத்திற்கு ஒத்துவைக்க மத்திய அமைச்சரவை முடிவு  அவசர சட்டம் பிறப்பிக்கவும் ஒப்புதல்,



🌹Breaking news🌹
=================

தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஒரு வருடத்திற்கு ஒத்துவைக்க மத்திய அமைச்சரவை முடிவு
அவசர சட்டம் பிறப்பிக்கவும் ஒப்புதல்,

Wednesday, 18 May 2016


OBC சான்றிதழ் சில தகவல்கள்
ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள்
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்,
பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு
1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான் றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட் டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டார அலு வலரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்மந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்ப தாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப் பித்துக் கொள்ள வேண்டும்.அதாவது, இந்த ஆண்டு 1.4.2015 அல்லது அதற்குப் பிறகு வாங்கப்படும் ஓபிசி சான்றிதழை 31.3.2016 வரை பயன்படுத்த முடியும். இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?
1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப் பிரிவில்தான் அதாவது திறந்த போட் டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
2. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.
3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தை களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது.
4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்து வர்கள், பொறியாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?1. குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
2. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட்டோர், அவர் களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 3. விவசாய வருமானம் ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப் பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம். தமிழக அரசின் ஆணை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத் தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண் டுள்ளது.
இந்த ஆணையின்படி, பிற்படுத்தப்பட் டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந் தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத் துக் கொள்ளக்கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவல கத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப் பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக் கும். இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில், OM and Orders என்கிற பகுதியில், O.M. No.36012/22/93-Estt.(SCT), தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும். தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளை களுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
தமிழக அரசின் ஆணை, விண்ணப் பப்படிவம், தேவைப்படுவோர், aiobc.gk@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
nanban SriJi

Monday, 9 May 2016

📚ஜூன் 2016 தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு அறிவிப்பு📝 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு 09.05.2016 முதல் 14.05.2016 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது


📚ஜூன் 2016 தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு அறிவிப்பு📝

 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு 09.05.2016 முதல் 14.05.2016 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது






Thursday, 5 May 2016

தேர்வு முடிவுகள்


*Breaking News:*

*+2 தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும்*

*பத்தாம் வகுப்புத்தேர்வுமுடிவுகள் மே25 ம் தேதியும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவிப்பு*

⚓ தூத்துக்குடி மாவட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான 2 ம் கட்ட பயிற்சி நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இடங்கள் 👇


⚓ தூத்துக்குடி மாவட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான
2 ம் கட்ட பயிற்சி
நாளை காலை 10 மணிக்கு
நடைபெறும்
இடங்கள் 👇👇👇

Wednesday, 4 May 2016

🎙2016 தேர்தலில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நடைபெறும் நாளில் ✏அனுப்பி வைக்க வேண்டிய 📩குறுஞ்செய்திகள் விபரங்கள்


🎙2016 தேர்தலில்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்
தேர்தல் நடைபெறும் நாளில்
 ✏அனுப்பி வைக்க வேண்டிய
 📩குறுஞ்செய்திகள்
விபரங்கள்

✏2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கான EMIS மாணவர் தகவல் தொகுப்பு 🖥பதிவு விரைவு படுத்துதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 03. 05. 2016


✏2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கான  EMIS மாணவர் தகவல் தொகுப்பு

🖥பதிவு விரைவு படுத்துதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 03. 05. 2016