Thursday, 31 December 2015


இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......






SLAS Test  NEWS:
UPPER PRIMARY
 SLAS தேர்வு
தூத்துக்குடி மாவட்ட 
பள்ளிகளின் பட்டியல்
ஓன்றியம் வாரியாக 
 SHOOL LIST 

Log on

www.jeyarajthoothukudi.blogspot.in  













பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்தல் -
அரசாணைப்படி உள்ளாட்சி அமைப்புகளுடன்
 இனைந்து துப்புரவு தொழிலாளர்களை
நியமிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்






TRS மூலமாக 10 இடைநிலை ஆசிரியர்
நேரடி நியமனம்:

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS  –  2015

Notification No. 01 /2015

Date:    30.12.2015

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006


NOTIFICATION

          This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and 2013  found in that Merit List.

The Director of Social Defence Department vide Letter No.1169/A2/2014, dated 11.12.2015 has informed that the Juvenile Justice Committee of Hon’ble High Court of Madras constituted as per the orders of Hon’ble Supreme Court of India in its report in W.P.No.6915 of 2015 has   stated that appointment of Secondary Grade Teachers already made and to be made in future shall be subject to the outcome of Special Leave Petition.

          Based on the observation of the Juvenile Justice Committee of the Hon’ble High Court of Madras and as per G.O.Ms.No.52, Social Welfare and Nutritious Meal Program (SW8(2)) Department dated 15.07.2015 and also by the Director of Social Defence D.O.Letter No.1169/A2/2014 dated 21.12.2015,  10 vacancies to be filled for the care and protection of Juveniles who are in conflict with law.
           Details of Vacancies:        
          Social Defence Department            Total Vacancies  : 10


Communal turn wise vacancy

Grand Total

GT

BC

BCM

MBC

SC

SCA

ST

General

2

2

-

1

1

-

-

6

Woman

1

1

-

1

-

1

-

4

Total

3

3

-

2

1

1

-

10

 These vacancies will be filled from the eligible qualified candidates in TNTET – Paper – I for the Residential Schools under Social Defence Department.

          All the selections made as per this Notification will be subject to the outcome of Special Leave Petition (Civil) No.29245 / 2014 filed before the Hon’ble Supreme Court of India.


Dated: 30-12-2015

Member Secretary

உண்மைத்தன்மை கண்டறிய
 அனைத்து பல்கலைக் கழகங்களின்
 வரைவோலை தொகை (DD AMOUNT)


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600  
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250  
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500 

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200 
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000 
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500. 
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000   
8.சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம் 
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500 10.மனோன்மணியம்சுந்தரனார் -500  
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
 12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13.TamilnaduTeacher Education Uni.sity-350
14.திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275. 
15.சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

மேலும் விடுப்பட்ட அல்லது
 அந்தந்த பல்கலைகழகத்தில் உண்மை தன்மை சான்று பெற்றவர்கள்
தற்பொழுது நடைமுறையில் உள்ள DD தொகையினைக் குறிப்பிடவும்.

Wednesday, 30 December 2015



2016-ஜனவரி டைரி:


02-பள்ளி திறக்கும் நாள்
02-குறைதீர்க்கும் நாள்
14-போகி R/L
15-பொங்கல்-விடுமுறை
16-விடுமுறை
17-விடுமுறை
18-தொடக்கக்கல்வி துறை இரண்டாம் பருவ தேர்வு ஆரம்பம்.
18-தமிழ்
19-ஆங்கிலம்
20-கணக்கு
21-அறிவியல்/கியார்வீன் மொகதீன் R/L
22-சமூக அறிவியல்
26-குடியரசு தினம்-விடுமுறைl

மருத்துவ விடுப்பு:

ML குறைந்தது 2 நாட்கள் துய்க்கலாம் - 

RTI தகவல்









Incentive news:

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015


Tuesday, 29 December 2015

2015-16 ஆம் கல்வி ஆண்டில் நடைப்பெற்ற , 

CRC நாட்களின் ஈடு செய்விடுப்பு காலாவதியாகும் நாளின் விவரம்...



தொடக்கல்வித்துறையில் பதவி உயர்வு - இயக்குநர் அனுமதி.




இன்று (29.12.2015) தொடக்கக் கல்வி இயக்குநர் மதிப்புமிகு முனைவர்
ரெ. இளங்கோவன் அவர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரிர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப்


பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் படி பதவி உயர்வு 30-12-2015 அன்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் இன்று  (29.12.2015) அனுமதி அளித்துள்ளார்கள்
ஜனவரி 1
முதல் எந்தெந்த துறைகளுக்கு
 "பான் கார்டு" கட்டாயமாகிறது;
வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு

ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்
  அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது.

அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்; அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

மத்திய அரசு பணிகள் நிர்வாகத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வந்தது. வரும் 1 ம் தேதி முதல் இந்த இரு விஷயங்களில் புதிய முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை. மேலும், அதிகாரிகளிடம் சான்றளிப்பு, வாக்குமூல சான்றிதழ் போன்றவை பெற வேண்டியது இல்லை.

* அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதுடன், சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்.

* சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் தேர்வுக்கு இனி நேர்காணல் இல்லை. தகுதி பார்த்து நேரடியாக பணிகளுக்கு அமர்த்தும் நடைமுறை பின்பற்றப்படும்.

* அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி பொது மக்களுக்கு குறையும்.

* அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், தாங்களே உறுதி சான்று அளிக்கலாம். அவர்கள் கையெழுத்திட்டு தந்தால் போதும்.

* மறைந்த தந்தையின் வேலையை பெற விண்ணப்பிக்கும் போது ‘அபிடவிட்’ தேவையில்ைல. அதற்கும் சுய சான்றளிப்பு போதும்.

* மாநில அரசுகளும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் நிர்வாக மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘அரசு பணியில் சேரும் இளைஞர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை வேண்டும். அதனால் தான் அவர்களே சான்றளித்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த நடைமுறையால் பெரிதும் பலன் கிடைக்கும்’ என்றார்
CPS NEWS :

தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம் செய்யப்பட்டு 01.04.2003க்குப்பின் நிரந்தரம் செய்து பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

வாக்குச்சாவடிகள் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு:

2016 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன. மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வருவாய்த் துறையினர் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் முடுக்கிவிடப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் வாக்குச்சாவடிகள், தேர்தல் பணியாளர்கள், வாக்காளர் பட்டியல் வெளியீடு போன்ற முன்தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டுள்ளன.

வாக்குச்சாவடிகள் உள்ள பள்ளிகள் சனி, ஞாயிறு, அரசுவிடுமுறை என இல்லாமல் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் பார்வையிடப்படலாம்.

தலைமையாசிரியர்களுக்கான சில முக்கியக் குறிப்புகள்:

1) உங்கள் செல் நம்பரை வருவாய்த் துறையினரோ மாவட்ட நிர்வாகமோ கேட்டால் கொடுங்கள்

2) வி.ஏ.ஓ, வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளர் ஆகியோரின் செல் நம்பர்களை உங்கள் ஃபோனில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

3) அப்படியே உங்கள் பள்ளிக்கு உட்பட்ட காவல் நிலைய தொடர்பு எண்ணையும் பதிவு செய்துகொள்ளவும்.

4) தேர்தல் சார்பாக பள்ளிக்கு எந்த அலுவலர் வந்தாலும் வணக்கம் தெரிவித்து வரவேற்பு கொடுங்கள்

5) நீங்கள் விடுப்பிலோ பிறபணியிலோ செல்லும்போது பொறுப்பேற்கும் ஆசிரியரிடமும் இதனைத் தெரிவியுங்கள். அவ்வப்போது நடக்கும் வாக்குச்சாவடிப் பார்வை விவரங்களை PTA/ VEC தலைவர்களிடம் தகவலுக்காகத் தெரிவித்துவிடுங்கள்.

6) வாக்குச்சாவடி வகுப்பறையில் மின்வசதி, ரேம்ப் வசதி, பழுதற்ற தரை- சுவர்- கூரை- கதவு- சன்னல் போன்றவற்றை உறுதி செய்யத்தான் பார்வையிடப்படுகிறது என்பதை உணர்ந்து அவர்கள் கேட்கும் விவரங்களைச் சரியாகக் கூறுங்கள்

7) கழிப்பிட வசதியைப் பொறுத்தவரை உங்கள் பள்ளியின் நிலைப்பாடு கட்டுமானத்தின் கீழோ, எதிர்பார்ப்பின் கீழோ இருந்தால் எஸ்எஸ்ஏ மேற்பார்வையாளரையும் உ.தொ.க.அலுவலரையும் ஆலோசித்துக் கூறுங்கள்

8) விடுமுறை தினங்களில் பார்வையாளர் வந்தால் முடிந்தவரை நீங்களே (நீங்கள் பெண்ணாசிரியர் என்றால் ஒரு துணையுடன்) பள்ளியைத் திறந்து காட்டி, பார்வையாளர் போனவுடன் பள்ளியைப் பூட்டி சாவியை உங்கள் வசமே வைத்துக் கொள்வது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடமோ, அரசியல் கட்சியாளர்களிடமோ பள்ளிச் சாவியைக் கொடுக்காதீர்கள்

9) வாக்குச்சாவடியாக உள்ள வகுப்பறையில் கணினி, அச்சுப்பொறி, பீரோ போன்ற முக்கியப் பொருட்கள் இருந்தால் அவற்றை வாக்குச்சாவடி அல்லாத வகுப்பிற்கோ தலைமையாசிரியர் அறைக்கோ கொண்டு செல்ல ஆரம்பித்து விடுங்கள்

10) சத்துணவுப் பணியாளாரோ, அங்கன்வாடிப் பணியாளரோ, பிற ஆசிரியர்களோ உள்ளூரில் குடியிருந்தால் அவர்கள் விடுமுறை நாட்களில் அவ்வப்போது பள்ளியைக் கண்காணித்துக் கொள்ளுமாறு சுமூகமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
 சமையல் எரிவாயு மானியம் ரத்து

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்பட்டுளள்து.

தகுதியானவர்களுக்கு மட்டும் மானிய சலுகைகள் சென்று சேரும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.