Thursday, 23 November 2017
Monday, 6 November 2017
NMMS ONLINE ENTRY
💠💠💠💠💠
NMMS தேர்வு - online பதிவு செய்வது எப்படி?
👉Step:1
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
"Click to access online portal" பகுதியை Click செய்யவும்
👉Step:2
திரையில் தோன்றும் WELCOME TO ONLINE PORTAL பக்கத்தில் NMMS EXAM NOV 2017 APPLICATION REGISTRATION - ஐ Click செய்யவும்.
👉Step:3
திரையில் தோன்றும் Log in பகுதியில் தங்கள் பள்ளிக்குரிய user id & password கொடுக்கவும். (குறிப்பு User id ல் DE0 என்பதில் 0 என்பது zero ஐ குறிக்கும்)
👉Step:4
தற்போது மீண்டும் ஒரு முறை user id & password கொடுக்கவும்.
👉Step:5
திரையில் முதலாவதாக தோன்றும் NOMINAL ROLL REGISTRATION ஐ Click செய்து மாணவரின் விவரங்களை பதிவு செய்து SUBMIT கொடுக்கவும். (குறிப்பு : அனைத்து விவரங்களும் விடுபடாமல் நிரப்பப்பட வேண்டும் )
👉Step : 6
மாணவனின் புகைப்படத்தை update செய்யவும். புகைப்படம்
25 Kb க்கு குறைவாக இருக்க வேண்டும். மாணவனின் விவரங்களை Online -ல் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக புகைப்படங்களை Resize செய்து 25 Kb க்கு குறைவாக Save செய்து கொள்வது வேலையை சுலபமாக்கும்.
👉Step:7
புகைப்படம் பதிவேற்றம் செய்தவுடன் திரையில் தோன்றும் download ஐ Click செய்து மாணவனின் online registration application ஐ Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக அனைத்து மாணவர்களின் விவரங்களை பதிவு செய்த பின் இறுதியாக...
👉SCHOOL WISE REPORT ஐ Click செய்து School report (Summary report) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
👉download செய்யப்பட்ட மாணவனின் online registration application - ஐ 2 நகல்கள் எடுத்து அதில் மாணவர் கையொப்பம், பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ( with Seal) இருப்பதை உறுதி செய்யவும்.
👉தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அழிக்கவோ, புகைப்படம் மற்றும் தவறான விவரங்களை INDIVIDUAL REPORT/EDIT/PHOTO UPDATE/DELETE option ஐ பயன்படுத்திதிருத்திக் கொள்ளவோ முடியும்.
👉அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியவை:👇
👉மாணவனின் online registration application - 2 நகல்கள்
👉SCHOOL WISE REPORT - 2 நகல்கள்
👉தேர்வு கட்டணம் .
👉குறிப்பு :
மேற்கண்ட Online பதிவேற்றத்தை கால தாமதமின்றி உடனே முடிப்பது சிறந்தது. இறுதி நேரத்தில் பதிவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். மேலும்
AEE0 அலுவலகத்தில் ஒவ்வொரு பள்ளியின் விண்ணப்பத்தையும் தொகுத்து , block wise report தயார் செய்து அனுப்ப சற்று கால அவகாசம் தேவைப்படுவதால் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இறுதி தேதிக்கு (8.11.17) முன்னதாகவே AEEO அலுவலகத்தில் ஒப்படைப்பது சிறந்தது.
NMMS தேர்வு - online பதிவு செய்வது எப்படி?
👉Step:1
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
"Click to access online portal" பகுதியை Click செய்யவும்
👉Step:2
திரையில் தோன்றும் WELCOME TO ONLINE PORTAL பக்கத்தில் NMMS EXAM NOV 2017 APPLICATION REGISTRATION - ஐ Click செய்யவும்.
👉Step:3
திரையில் தோன்றும் Log in பகுதியில் தங்கள் பள்ளிக்குரிய user id & password கொடுக்கவும். (குறிப்பு User id ல் DE0 என்பதில் 0 என்பது zero ஐ குறிக்கும்)
👉Step:4
தற்போது மீண்டும் ஒரு முறை user id & password கொடுக்கவும்.
👉Step:5
திரையில் முதலாவதாக தோன்றும் NOMINAL ROLL REGISTRATION ஐ Click செய்து மாணவரின் விவரங்களை பதிவு செய்து SUBMIT கொடுக்கவும். (குறிப்பு : அனைத்து விவரங்களும் விடுபடாமல் நிரப்பப்பட வேண்டும் )
👉Step : 6
மாணவனின் புகைப்படத்தை update செய்யவும். புகைப்படம்
25 Kb க்கு குறைவாக இருக்க வேண்டும். மாணவனின் விவரங்களை Online -ல் பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக புகைப்படங்களை Resize செய்து 25 Kb க்கு குறைவாக Save செய்து கொள்வது வேலையை சுலபமாக்கும்.
👉Step:7
புகைப்படம் பதிவேற்றம் செய்தவுடன் திரையில் தோன்றும் download ஐ Click செய்து மாணவனின் online registration application ஐ Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக அனைத்து மாணவர்களின் விவரங்களை பதிவு செய்த பின் இறுதியாக...
👉SCHOOL WISE REPORT ஐ Click செய்து School report (Summary report) ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
👉download செய்யப்பட்ட மாணவனின் online registration application - ஐ 2 நகல்கள் எடுத்து அதில் மாணவர் கையொப்பம், பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ( with Seal) இருப்பதை உறுதி செய்யவும்.
👉தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அழிக்கவோ, புகைப்படம் மற்றும் தவறான விவரங்களை INDIVIDUAL REPORT/EDIT/PHOTO UPDATE/DELETE option ஐ பயன்படுத்திதிருத்திக் கொள்ளவோ முடியும்.
👉அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியவை:👇
👉மாணவனின் online registration application - 2 நகல்கள்
👉SCHOOL WISE REPORT - 2 நகல்கள்
👉தேர்வு கட்டணம் .
👉குறிப்பு :
மேற்கண்ட Online பதிவேற்றத்தை கால தாமதமின்றி உடனே முடிப்பது சிறந்தது. இறுதி நேரத்தில் பதிவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். மேலும்
AEE0 அலுவலகத்தில் ஒவ்வொரு பள்ளியின் விண்ணப்பத்தையும் தொகுத்து , block wise report தயார் செய்து அனுப்ப சற்று கால அவகாசம் தேவைப்படுவதால் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இறுதி தேதிக்கு (8.11.17) முன்னதாகவே AEEO அலுவலகத்தில் ஒப்படைப்பது சிறந்தது.
Saturday, 28 October 2017
Friday, 27 October 2017
Friday, 13 October 2017
Thursday, 5 October 2017
Saturday, 30 September 2017
Thursday, 28 September 2017
ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு
ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு
தனது பணியை தொடங்கியது
Tuesday, 8 August 2017
Monday, 7 August 2017
Sunday, 9 July 2017
RMSA TRAINING FORMS
RMSA TRAINING
REGISTRATION FORMS
&
FEED BACK LINK AVAILABLE
at
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc0yvbi_ipigyiecWnRNeHaoNHpsJqjniaQ6QBgeD47xkVTmQ/viewform?usp=send_form
https://drive.google.com/file/d/0B13Lkvs6VuYONm9vUFU3R2daV1E/view?usp=drivesdk
Saturday, 8 July 2017
Tuesday, 4 July 2017
Wednesday, 28 June 2017
Saturday, 24 June 2017
Friday, 23 June 2017
🌸🍀🌸🍀🌸🍀
*புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்*
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள், 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.*
*அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை. தமிழகம் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தினாலும், இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை*.
*இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு, 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான்,' என ஆணையம் பதிலளித்துள்ளது.*
*இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை; இதனை செயல்படுத்த வேண்டுமென, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்*
Sunday, 18 June 2017
2017-18 ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியல் & ஆண்டு செயல்திட்டம் மாத வாரியாக
தொடக்க/நடுநிலை/உயர்நிலை /மேல்நிலைப்
பள்ளி
2017-18 ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியல்
&
ஆண்டு செயல்திட்டம் மாத வாரியாக
Log on
https://drive.google.com/file/d/0B13Lkvs6VuYOSXdIai1PS25SLWc/view?usp=drivesdk
தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான நடப்பு ஆண்டு செயல் திட்டத்தை (2017-2018) தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது
📗📘📕
*210 நாட்கள் பள்ளிகள் இயங்கும் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியீடு பள்ளிகளுக்கான ஆண்டு செயல்திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் நடப்பு கல்வி ஆண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது*.
தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான நடப்பு ஆண்டு செயல் திட்டத்தை (2017-2018) தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த 7-ந் தேதி பள்ளிகள் திறந்தது முதல் கல்வி ஆண்டு முடியும் வரை எத்தனை நாட்கள் பள்ளிகள் இயங்கும்? என்னென்ன நாட்களில் விடுமுறை?, தேர்வு எப்போது?, அந்தந்த மாதங்களில் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன? ஆகியவை குறித்து அதில் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த தேதியில் தேர்வுகள் நடைபெறும்? என்பது அடங்கிய தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது
📝👇
Thursday, 15 June 2017
*CRC பயிற்சி நாட்கள் மாற்றம்
- *CRC பயிற்சி நாட்கள் மாற்றம்.*
- *2017-ஆகஸ்டு 5*
- *2017-செப்டம்பர்- 16*
- *2017-அக்டோபர்- 7*
- *2018-ஏப்ரல் மாதத்தில் 7 நாட்கள்,* *20,23,24,25,26,27,30.*
- *ஈடுசெய் விடுப்பு இல்லை.*
- *பள்ளி வேலை நாட்கள்- 210
*37 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்* *பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்
🌺🍀🌺🍀🌺🍀
*37 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்*
*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.*
பள்ளிகள்
1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்
3) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் ரூ.31.82 கோடி செலவில் வழங்கப்படும்.
4) 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ 6.71 கோடி செலவில் கணினி வழிக் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.
5) 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் ரூ. 22.56 கோடி செலவில் வழங்கப்படும்.
6) 31322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 4.83 கோடி செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.
ஆசிரியர் நலன்
7) 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
8) கனவு ஆசிரியர் விருது. மாவட்டத்திற்கு 6 சிறந்த ஆசிரியர்களுக்கு ரூ10000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்.
9) தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம்.
10) சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி
மாணவர் நலன்
11) அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.39.25 கோடி செலவில் கற்றல் துணைக்கருவிகள் வழங்கப்படும்.
12) திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 2.93 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்
13) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.3 கோடி செலவில் மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்
14) கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத்திருவிழா ரூ. 4 கோடி செலவில் நடத்தப்படும்.
15) பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும்
16) ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்
17) மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும் கருத்தரங்குகள் ரூ. 2 கோடி செலவில் நடத்தப்படும்
மின் ஆளுமை
18) காணொளி பாடங்கள், கணினி வழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
19) அரசுத்தேர்வுகள் இயக்கக செயல்பாடுகள் ரூ.2 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும்
20)மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணையவழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நூலகம்
21) ரூ.25 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும்
22) அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ரூ.3.கோடி செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்
23)தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்
24) தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும்
• சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் – கீழடி, சிவகங்கை மாவட்டம்
• தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் – தஞ்சாவூர்
• நாட்டுப்புறக் கலைகள் - மதுரை
• தமிழ் மருத்துவம் - திருநெல்வேலி
• பழங்குடியினர் பண்பாடு - நீலகிரி
• கணிதம், அறிவியல் - திருச்சி
• வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் - கோயம்புத்தூர்
• அச்சுக்கலை – சென்னை
25) மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.72 இலட்சம் செலவில் அமைக்கப்படும்
26) 123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன் கூடிய கணினி வசதி ரூ. 1.84 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்
27) ரூ. 2. கோடி செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும்
28) அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டம் தொடங்கப்படும்
29) அரிய வகை நூல்களைப் பாதுகாத்து வரும் தனியார் அமைப்புகள் நடத்தி வரும் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படும்
30) நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ரூ.5 கோடி செலவில் மொழி பெயர்க்கப்படும்.
31) அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்
நிர்வாகம்
32) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் ரூ. 60 இலட்சம் செலவினத்தில் ஏற்படுத்தப்படும்
33) கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்
34)பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்களுக்கு ரூ.2.89 கோடி செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்
முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி
35) 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் ரூ.13.94 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
உலகத் தமிழர் நலன்
36) உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தலுக்கு தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவை அறிமுகம்.
37) உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்குப் ஒரு இலட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்குதல். முதற்கட்டமாக யாழ்ப்பாணம் பொது நுாலகத்திற்கும், மலேயாப் பல்கலைக் கழக நூலகத்திற்கும் ஒரு இலட்சம் நூல்கள் கொடை.
.
Monday, 15 May 2017
March 2017 +2 - PROVISIONAL MARK SHEET -for INDIVIDUALS
March 2017
+2 - PROVISIONAL MARK SHEET -for INDIVIDUALS
Can be downloaded from the following
LINK
👇👇👇👇
http://dge.tn.nic.in/hscprind
Saturday, 29 April 2017
⚫⚫⚫⚫⚫⚫⚫
*2004 முதல் நியமன நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் நிலை*
🔵 *மாறுவது எப்போது?*
🔴 *அரசு கவனிக்குமா?*
🔶 *2004-06 தொகுப்பு ஊதிய பாதிப்பு*
🔷 *ஒரே TRB தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் பள்ளிக் கல்வித்துறையில் PG பதவி உயர்வு*
🔶 *ஒரே பணி இன்று வரை பணியேற்பவர் பதவி உயர்வில் 2004ல் பணியேற்றவரை விட மூத்தவர் என பதவி உயர்வும் அளிக்கப்படும் நிலை*
🔷 *பணியேற்று 13 ஆண்டுகளாக பணி எந்த NORMS இல்லாமல் தொடக்ககல்வியில் தற்கால நிலையில் பொருந்தாத பழைய அரசாணையை பயன்படுத்தும் நிலை*
🔶 *ஒரே நியமன தேர்வு ஒருவருக்கு STATE LEVEL SENIORITY மற்றவர்களுக்கு BLOCK LEVEL SENIORITY என பதவி உயர்வு பாதிப்பு*
🔷 *தொடக்ககல்வியில்1990-91 தொகுப்பூதிய நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒரு முறை மாறுதல் பெற்றாலும் BLOCK LEVEL SENIORITY மாற்றம் ஏதும் இல்லை ஆனால் 2004ல் பணியேற்றவரின் நிலை*
🔶 *அறிவியல் உதவி தொடக்ககல்வி அலுவலர் பதவி உயர்வை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்குவதோடு DEPTMENTAL EXAM முடித்த அனைவரையும் AEEO PANELல் வைக்கலாமே*
🔷 *பங்களிப்பு ஓய்வூதியம் மூலமாக ஓய்வுக்குப் பின் எந்த ஒரு பலனும் பெறமுடியாத நிலை*
🥀🥀🥀
*அரசு கவனிக்குமா?*
🥀🥀🥀
*ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நமதே*
Saturday, 22 April 2017
💥💥💥💥💥💥 *தொடக்கக் கல்வி இயக்ககம்* 🌈 *2017 புதிய மாறுதல் கோரும் விண்ணப்பம் 3 பக்கங்கள்*
💥💥💥💥💥💥
*தொடக்கக் கல்வி இயக்ககம்*
🌈 *2017 புதிய மாறுதல் கோரும் விண்ணப்பம் 3 பக்கங்கள்*
💐 *TEACHERS GENERAL TRANSFER COUNSELLING - 2017**
📚 *DEE NEW 2017 TRANSFER FORM (INSIDE BLOCK/DISTRICT/DISTRICT TO DISTRICT)*
🌺 *APPLY Between 24.4.17 -5.5.17*
🌼 *one teacher can apply within block, other block and also District in the same form with✔*
👇👇👇👇
Friday, 31 March 2017
Subscribe to:
Posts (Atom)