Monday, 29 February 2016

CPS - திட்டம் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது: 


CPS - திட்டம் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது:


வழக்கு விசாரணை வருகிற வாரம் க்ஷவர உள்ளது. .மத்திய அரசின் ஓய்வுதிய ஒழுங்கு முறை ஆணையம் ( PFRDA.) அறிவிப்பு --தமிழ்நாடு ,திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வுதிய திட்டத்தில் இல்லை என அறிவிப்பு.இதன் அடிப்படையில் நமது வழக்கறிஞர் 19 வினாக்களை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கேட்டு அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
நன்றி கிப்சன் sir

Friday, 26 February 2016

மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா?


29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுமா?
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள்கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைள், அறிவிப்புகள் இருக்கும்.குறிப்பாக வருமானவரி செலுத்வோர் பட்டியலில் அதிக அளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுக்கு தற்போதுரூ.2½ லட்சமாக இருக்கும் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது.மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கவரும் வகையில் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.

இதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம்கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமை அதிகரிக்கும்.தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டிச் சலுகை ரூ.2 லட்சம் வரை என உள்ளது. இதுவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.நிதி கட்டுப்பாடு தொடர்பாக பொருளாதார வல்லுனர்களிடம் கருத்து கேட்டு அறியவும் மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.

Wednesday, 24 February 2016

CPS பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைக்கான  படிவங்கள்:


CPS  NEWS:

CPS பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைக்கான  படிவங்கள்:









40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை


40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை

சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐ சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன் வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/- வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊனத்தின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 40 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் இருந்தாலே இனிமேல் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் இல்லாதவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவராகவும், குடும்ப சொத்து மதிப்பு ரூ.50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும், குடும்பத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் வாரிசு இருக்க கூடாது என்பது உள்ளடக்கிய ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற விதி மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி, பணி இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பெயர் மாற்றம்

சமூக பாதுகாப்பு திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்பதை மாற்றி, மாற்றுத்தினாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்று இனிமேல் அழைக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



CPS  NEWS: CPS பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைக்கான அரசாணை மற்றும் படிவங்கள் வெளீயீடு:



CPS  NEWS:

CPS பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைக்கான அரசாணை மற்றும் படிவங்கள் வெளீயீடு:

G.O No. 59 Dt:22/02/16
PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Sch eme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service












Tuesday, 23 February 2016

TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/ to Rs.3,00,000/- - Orders - Issued ›


TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/ to Rs.3,00,000/- - Orders - Issued

Finance DepartmentYear : 2016 G.O.No.57 Dt: February 22, 2016


Friday, 19 February 2016

CPS: அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் தகவல்:


CPS:
அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் தகவல்:


 புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:


குணசேகரன் (இந்திய கம்யூ னிஸ்ட்):

புதிய ஓய்வூதியத் திட் டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், இதேதிட்டம் நாடாளுமன்றத்தில் 2004-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் படும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் காரண மாக ஓய்வூதியத் தொகைக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் தான் பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி எங்கு இருக்கிறது?

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
அந்தப் பணம் அரசு கஜா னாவில்தான் இருக்கிறது.

அப்படி இருக்கையில் ஒய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தோரின் பிடித்தம் செய்யப்பட்ட   cps பணத்தை கொடுக்க மட்டும்  இன்னும் 13  ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது....??

Tuesday, 16 February 2016

NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD




NMMS EXAM - 2016 NOMINAL ROLL DOWNLOAD




    Dear Trs click below the link and Download your students hall ticket
Nmms Online Application.& instructions

www.tndge.in/login.aspx


💥Thoothukudi DT

User name: AEO.TUTICORIN
Password: TXTRNNXCAQ

💥VELLORE DT.
User name: AEO. VELLORE
Password: IGVOYMXCYV

💥VILLUPURAM DT.
User name  AEO.VILLUPURAM
Password. ZJWJECCNOA

💥KANCHEEPURAM DT
NMMS  USER ID:AEO.KANCHEEPURAM  PASSWORD:ETOYBNCSZU

💥Karur district
User name: AEO.KARUR
Password: VGYIZEXSPZ.

TIRUVALLUR DT.
User name : AEO.TIRUVALLORE
Password : PBDUOAKHSK

🙏🙏🙏🙏🙏🙏



Friday, 12 February 2016

தொடக்கக்கல்வி  1-3 வகுப்பு மாணவர்களின் EMIS விவரங்களை 26/02/2016 க்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயக்குனர் உத்தரவு


தொடக்கக்கல்வி
1-3 வகுப்பு மாணவர்களின் EMIS விவரங்களை 26/02/2016 க்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயக்குனர் உத்தரவு -
 தொடக்கக்கல்வி செயல்முறைகள்:001997/J2/12.2.16..

1062 முதுகலை ஆசிரியர்கள் TRB மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறைக்கு அனுமதிக்கான அரசாணை  வெளியீடு

: 1062 முதுகலை ஆசிரியர்கள் TRB மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறைக்கு அனுமதிக்கான அரசாணை 
வெளியீடு :

 பள்ளிக்கல்வித்துறை
G.O.NO.34/10.02.2016









Monday, 8 February 2016

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் மொத்தம்  547 நேரடி நியமனம்:

தூத்துக்குடி மாவட்டத்தில்
சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் மொத்தம் 
547 நேரடி நியமனம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் 
 173 சத்துணவு அமைப்பாளர்  மற்றும் 
374 சத்துணவு உதவியாளர்
பணியிடங்கள் நேரடியாக  நிரப்பப்பட உள்ளது 
விண்ணப்பம் செய்ய கடைசி நாள்
பிப்ரவரி மாதம் 13 ந் தேதி

 



Sunday, 7 February 2016

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: தொடக்கக்கல்விஇயக்குநரின் செயல்முறைகள்.028577/ஜே2/1.2.16: Inspire Award அனைத்து மாணவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க உத்தரவு


புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது:

தொடக்கக்கல்விஇயக்குநரின் செயல்முறைகள்.028577/ஜே2/1.2.16:
Inspire Award அனைத்து மாணவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க
உத்தரவு

Friday, 5 February 2016

பிப்ரவரி மாத CRC கூட்ட நாட்கள் விவரம்



பிப்ரவரி மாத CRC கூட்ட நாட்கள் விவரம்:


தலைப்பு : வகுப்பறையில் பயிற்சிகளின் தாக்கம்.
தொடக்க நிலை : 20.02.2016 உயர்தொடக்கநிலை : 27.02.2016
SSA SPD proceedings 1108/a11/trg/2015 DT.5.2.2016.


2015-16 கல்வியாண்டு மாணவர்கள் விவரம் EMlS-ல் பதிவு செய்யப்பட வேண்டும்

2015-16 கல்வியாண்டு
மாணவர்கள் விவரம் EMlS-ல் பதிவு செய்யப்பட வேண்டும்






7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஏற்பு:


7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஏற்பு:

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க 7–வது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு அப்படியே ஏற்க முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இது தவிர 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது. பின்னர் தனது பரிந்துரைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் அளித்தது.
இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் அதிருப்தி எழுந்தது. போக்குவரத்து அலவன்ஸ் உயர்த்தப்படவில்லை என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை ஆராயவும் முரண்பாடுகளை சரி செய்யவும் மத்திய அரசின் கேமினட் செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் 42 அரசுத்துறை செயலாளர்களுக்கு இடம் பெற்று இருந்தனர்.
இந்த குழு சம்பள கமிஷன் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி பல்வேறு தரப்பிடம் கருத்து கேட்டது. விரைவில் இதற்கு இறுதி வடிவம் கொடுத்து மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு அமலுக்கு வரும்.
7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வருகிற மத்திய பட்ஜெட்டில் சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் நிதிமந்திரி அருண்ஜெட்லி கவனம் செலுத்தி வருகிறார்.
7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே அமல்படுத்தவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமலுக்கு வரும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. பல்வேறு அலவன்சுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆகவும் அதிகபட்ச சம்பளம் ரூ.2.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சம்பள உயர்வை ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியானதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் சம்பள உயர்வை பெறலாம்.

Thursday, 4 February 2016

CPS Account News:


CPS Account News:

 இரண்டு cps account எண்கள் பெற்றுள்ள அரசு ஊழியர்களின் விவரம் கோருதல் சார்பு.







CPS NEWS



அரசு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் கணக்குகள் பராமரிப்பு அனைத்தும் தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது




.
.

327 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


327 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 327 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: சத்துணவு அமைப்பாளர்

காலியிடங்கள்: 327

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. பழங்குடி பிரிவினர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின் படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சத்துணவுப் பிரிவு) அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களுக்கு சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.02.2016

Tuesday, 2 February 2016

CPS. வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்கள் நலக் கூட்டணி  தலைவர்கள்  கேள்வி? :


CPS  ஓய்வு ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம்
மத்தியத் தொகுப்பிற்கு எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது?
 அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மக்கள் நலக் கூட்டணி  தலைவர்கள்  கேள்வி? :

*இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு இதுவரையில் சுமார் 2000த்திற்கும் அதிகமானோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அல்லது பணியில் இருக்கும்போதே இறந்துள்ளனர். அவர்களுக்கு இதுநாள் வரையில் பணப் பலன் ஏதும் வழங்கப்படவில்லை.

*இதுபற்றிக் கேட்டால், கொள்கை முடிவு ஏதுவும் எடுக்கவில்லை என்று அரசிடம் இருந்து பதில் வருகிறது.......

*கடந்த 12 ஆண்டுகளாக முடிவு எடுக்காதவர்கள் இனி என்ன கொள்கை முடிவு எடுக்க முடியும்?......

*2003 முதல் இன்று வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் என்ன ஆனது? .......

*(CPS) தன் பங்களிப்பு ஓய்வு ஊதியத்திலிருந்து மத்தியத் தொகுப்பிற்கு எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது?......

 *இதுபற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.........

Monday, 1 February 2016

ஆசிரிய பெருமக்களின்  நியாயமான போராட்டம் பத்திரிகை செய்தி:


ஆசிரிய பெருமக்களின்  நியாயமான போராட்டம்
பத்திரிகை செய்தி:


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை தமிழ்மொழி வழி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் தன் பங்கேற்பு ஊதிய திட்டம் ரத்து செய்யப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்ற வில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் இப்போதாவது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர் ஆசிரியர்கள்.

நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை வசதிகள் இருந்தாலும், கல்வியறிவு இன்றி எதுவும் சிறக்காது. எல்லா துறை வளர்ச்சியும் கல்வி சார்ந்தவைதான் என்பதை யாரும் மறுக்க இயலாது. கல்வி நிலையங்கள் சிறப்பாக இருந்தால், கல்வி சரியாக கற்பிக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவருவோர் அறிஞர்களாகவும், தொழில்நுட்ப நிபுணர்களாகவும் திகழ்வார்கள். இது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இதனால்தான் கல்வி நிலையங்களுக்கும், அதில் அறிவு புகட்டும் ஆசிரியர்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரவேண்டும். ஆனால், இதற்கெல்லாம் மாறாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற அடக்குமுறை ஆசிரியர்கள் மீது ஏவப்படுவது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.
இதுபோன்றுதான் சத்துணவு பணியாளர்களும் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர். இதற்காக வேலை நிறுத்த ஆயத்த மாநாடும் நடத்துகின்றனர். ஆனால், இதில் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்க அரசு திடீர் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. அதோடு, சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தின்போது ஆசிரியர்களை சத்துணவு வழங்க அரசு கோரியுள்ளது. இந்த இரண்டுமே கல்வி நிலையங்கள் தொடர்பானவை. இந்த போராட்டங்களால் பாதிக்கப்படுவது ஆசிரியர்களும், ஊழியர்களும் மட்டுமல்ல. மாணவர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உணர்ந்து பார்க்க வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், கோரிக்கைகளை பரிசீலித்து ஆவன செய்வதும் அரசின் ஜனநாயக கடமைகளில் ஒன்றுதான். இதற்கு மாறாக போராட்டத்தை அடக்க முயற்சிப்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது. கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை, ஏற்புடைய அம்சங்களை ஆராய்ந்து நிறைவேற்றுவதை பொறுப்பாக உணர்ந்து அரசு செயல்பட வேண்டியது அவசியம்.