Friday, 19 February 2016

CPS: அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் தகவல்:


CPS:
அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் தகவல்:


 புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:


குணசேகரன் (இந்திய கம்யூ னிஸ்ட்):

புதிய ஓய்வூதியத் திட் டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், இதேதிட்டம் நாடாளுமன்றத்தில் 2004-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் படும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் காரண மாக ஓய்வூதியத் தொகைக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் தான் பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி எங்கு இருக்கிறது?

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
அந்தப் பணம் அரசு கஜா னாவில்தான் இருக்கிறது.

அப்படி இருக்கையில் ஒய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தோரின் பிடித்தம் செய்யப்பட்ட   cps பணத்தை கொடுக்க மட்டும்  இன்னும் 13  ஆண்டுகளாக பரிசீலனையில் உள்ளது....??

No comments:

Post a Comment